வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்த இளம்பெண்... மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்...

வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்த இளம்பெண்... மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்...


young-girl-committed-suicide-in-kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியை சேர்ந்தவர்கள் சின்னப்பர் - தங்கபாய் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகள் அபிதா ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

அபிதா நித்திரவிளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த வாலிபர் அவரை திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஊர் சுற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் அந்த வாலிபரின் குடும்பத்திற்கு தெரிய வரவே அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

dead

இதனால் அந்த வாலிபர் அபிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அபிதா வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1தேதி வீட்டிலிருந்த அபிதா வயிறு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார்.

அவரைப் பெற்றோர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்தும் அபிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவி அபிதா காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.