தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கொரோனாவால் 1½ வயது குழந்தை உயிரிழப்பு! நேற்று ஒருநாள் மட்டும் பலி எண்ணிக்கை எவ்வளவு?
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் இல்லாமல் தாக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக்தில் உயிரிழந்தவர்களில் சென்னையில் 34 பேரும், மதுரை, செங்கல்பட்டில் தலா 5 பேரும், ராமநாதபுரம், திருவள்ளூரில் தலா 2 பேரும், விழுப்புரத்தில் 1½ வயது குழந்தையும், காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், திருநெல்வேலியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,079 ஆக அதிகரித்துள்ளது.