பப்ஜி விளையாட்டில் சவால்.! பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்.!

பப்ஜி விளையாட்டில் சவால்.! பரிதாபமாக உயிரை விட்ட சிறுவன்.!


young boy suicide for game

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகரில்16 வயதான ரவி என்ற சிறுவன் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதாக கூறி அடிக்கடி செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த ரவியின் தாய் ரவியை கண்டித்துள்ளார். ஆனாலும் வீட்டில் யாரும் இல்லாதப்போது பப்ஜி விளையாடுவதில் அதிக ஆர்வமாக இருந்துள்ளார் ரவி.

இந்த நிலையில் ரவியின் தாய் ஜெயலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை திறக்கமுடியாததால், சந்தேகமடைந்த ஜெயலட்சுமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்துள்ளார்.

suicide

அப்போது ரவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பப்ஜி விளையாட்டின் போது நண்பர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி சவால் விடுத்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்த ரவி தற்கொலை செய்துக்கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.