ஒரே ஒரு போன் கால்..! உயிருக்கு போராடிய கர்ப்பிணிக்கு இரத்தம் கொடுக்க நள்ளிரவில் ஓடிவந்த இளைஞர்..! நெகிழ்ச்சி சம்பவம்.!

ஒரே ஒரு போன் கால்..! உயிருக்கு போராடிய கர்ப்பிணிக்கு இரத்தம் கொடுக்க நள்ளிரவில் ஓடிவந்த இளைஞர்..! நெகிழ்ச்சி சம்பவம்.!


Young boy donated blood at midnight to save pregnant women

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் இரவோடு இரவாக பயணம் செய்து இரத்தம் வழங்கி உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சிதம்பரத்திலுள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை வயிற்றிலையே இறந்துவிட்டநிலையில், அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கவேண்டிய கட்டாயம். இந்நிலையில் அந்த பெண்ணின் உடல்நிலையும் மிகமோசமடைந்துள்ளது.

இதனால் நெகட்டிவ் வகை இரத்த பிரிவை கொண்ட அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள நெகட்டிவ் வகை இரத்தம் தேவைபட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய தாமதமானால் அந்த பெண்ணும் உயிரிழக்கும் சூழல். இந்த இரவில் எப்படி நெகட்டிவ் வகை இரத்தத்தை ஏற்பாடு செய்வது என குழம்பிய மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து கடலூரில் இயங்கி வரும் தன்னார்வ அமைப்பான கடலூர் சிறகுகள் குழுவினருக்கு இரவு 8 மணிக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளனர்.

இந்நிலையில்தான் குறிப்பிட்ட இரத்த வகை பற்றி ஏற்கனவே தான் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபோது கடலூரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞர் நானும் இதேவகை இரத்த பிரிவுதான் என பதிவிட்டிருந்தது கடலூர் சிறகுகள் அமைப்பின் தலைவர் சண்முகராஜாவுக்கு நினைவிற்கு வந்துள்ளது.

உடனே அந்த இளைஞரின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்து விவரத்தை கூற, அவரும் இரத்தம் வழங்க தயாராகியுள்ளார். இதனை அடுத்து சண்முகராஜா தனது காரிலையே ரஞ்சித்குமார் வீட்டிக்குரு சென்று, அவரை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக 50 கிலோமீட்டர் கடந்து மருத்துவமனை சென்றடைந்தனர்.

பொதுவாக இரவில் இரத்த தானம் பெறுவதில்லை என்றாலும், கர்ப்பிணியின் நிலைமையை கருத்தில்கொண்டு ரஞ்சித்குமாரிடம் இருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடித்துள்ளது. நள்ளிரவிலும் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்ற துணிந்து வந்த ரஞ்சித் குமாருக்கு மருத்துவர்கள், அந்த பெண்ணின் உறவினர்கள் உட்பட பலரும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்து அந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.