தமிழகம்

இறகு பந்து விளையாடிய சிறுவன்! மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

Summary:

young boy died while palying

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராஜீவ் நகரைச் சேர்ந்த மணிகண்டன் - மீனாட்சி தம்பதியின் மகன் 13 வயது நிரம்பிய கோகுல் என்ற சிறுவன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். 

இந்தநிலையில் கோகுல் நேற்று மாலை தனது வீட்டின் மாடியில் சக நண்பர்களுடன் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென்று பந்து மாடியின் அருகே சிக்கியுள்ளது.

அப்போது சிக்கிய பந்தை எடுப்பதற்காக கோகுல் அருகில் இருந்த அலுமினிய கம்பியை எடுத்து பந்தை எடுக்க சிறுவன் முரசை செய்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக கோகுல் கையில் இருந்த அலுமினிய கம்பி மின் கம்பியில் பட்டதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

சகா நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவன் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement