ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.! கொடூர இளைஞனின் வெறிச்செயல்.!
ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.! கொடூர இளைஞனின் வெறிச்செயல்.!

சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சந்தைவெளிபேட்டை பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிறுமி ஒருவர் தனது தனது அண்ணனுடன் வயல்வெளிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அழுது படியே தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரளித்த புகாரின் பேரில் போலீசார்அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.