மாணவியை பாலியல் கொடுமை செய்துவிட்டு.! பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்.!



young boy abused school girl

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், கார்த்திக்கை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மாணவியின் வீட்டுக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.