ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத ஏக்கம்! பினாயில் குடித்துவிட்டு ஆற்றில் மூழ்கிய பெண்! பரிதாப மரணம்!

women suicide in river


women-suicide-in-river

கரூர் மாவட்டம் மொஞ்சனூர், பூண்டிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். 34 வயது நிரம்பிய இவர் கடந்த சில ஆண்டுகளாக மார்த்தாண்டம், வெட்டுமணி அருகே மாம்பள்ளிதோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி இருந்து, பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக, தனது தாயை சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார் கார்த்திகேயன். கார்த்திகேயனின் தாய்க்கு இங்குள்ள காலநிலை பிடிக்கவில்லை என்றும், தன்னை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மகனிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். 

ஆனால், ஊரடங்கு காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஊரடங்கு முடிந்த பின்பு அனுப்பி வைப்பதாக கார்த்திகேயன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாலை கார்த்திகேயனின் தாய் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள குழித்துறை ஆற்றிற்கு சென்று ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். 

Women

இதனைப்பார்த்த அங்கிருந்த நபர்கள் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் தாயாரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் அவரின் தாய் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார்த்திகேயனின் தாய் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் பினாயில் குடித்துவிட்டு ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உயிரிழந்த கார்த்திகேயனின் தாய் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.