உயர் அதிகாரிகள் மிரட்டியதால், தற்கொலைக்கு முயன்ற பெண்.! அதிர்ச்சி வீடியோ.!



women suicide attempt for higher official torture

கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் சந்தியா என்பவர் உயர் அதிகாரிகள் மிரட்டியதால் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரூர் மாவட்டம் கொளத்து பாளையம் அங்கன்வாடி பணியாளர் சந்தியாவை அவரது உயர் அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக சந்தியாவிற்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளதால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது பெண் மேல்அதிகாரி ஒருவர் சந்தியாவை தொடர்பு கொண்டு அலுவலகத்தில் வந்து உடனடியாக வேலை செய்யவில்லை என்றால், பணிபுரியும் மையத்திற்கு சீல் வைப்பதாகவும், ஊதியம் வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சந்தியா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சந்தியா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர் சந்தியா நேற்று தூக்க மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.