இதுதான் கடவுள் மனசு.. ஆடையின்றி நிர்வாணமாக சுற்றிதிரிந்த வாலிபர்! பெண் செய்த தரமான காரியம்!!

இதுதான் கடவுள் மனசு.. ஆடையின்றி நிர்வாணமாக சுற்றிதிரிந்த வாலிபர்! பெண் செய்த தரமான காரியம்!!


women-help-to-upnormal-man

நெல்லையில் நிர்வாணமாக சாலைகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கண்ட பெண் ஒருவர் மனித நேயத்துடன் அவருக்கு உடை அணிவித்து, உணவளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி நகர பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவர் நெல்லை - மதுரை பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் உடையின்றி நிர்வாணமாக சாலையில் நடந்து செல்வதை கண்டுள்ளார்.

young girl

உடனே நந்தினி தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி, அதில் இருந்த சால்வையை எடுத்துச் சென்று அந்த வாலிபரின் இடுப்பில் கட்டியுள்ளார். மேலும் அருகிலிருந்த கடைக்குச் சென்று பழங்கள் மற்றும் பிஸ்கட் வாங்கி வந்து அவருக்கு தனது கைகளாலே ஊட்டி விட்டுள்ளார்.

இந்த நிலையில் மனிதாபிமானத்துடன், சகோதரத்துவத்துடன் இளம்பெண் தானே முன்வந்து நிர்வாணமாக நடந்து திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனைக் கண்ட பலரும் அந்தப் பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.