தமிழகம்

தலைபிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண், திடீரென வயிறுவீங்கி உயிரிழப்பு! வயிற்றின் உள்ளே இருந்த பொருளால் பேரதிர்ச்சி!

Summary:

women dead after delievery

கடலூர் மாவட்டம் கலர்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரது மனைவி பிரியா. 24 வயது நிறைந்த அவர் கர்ப்பமாக இருந்த நிலையில்,  தலைப் பிரசவத்திற்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து குழந்தையும், தாயும் மருத்துவமனையில் இருந்து வந்தனர்.

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியாவின் வயிறு திடீரென வீங்க தொடங்கியுள்ளது. மேலும் அவரது உடல்நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 பின்னர் அவரது உடல் பரிசோதனை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் வயிற்றில் பழைய துணிகள், பஞ்சுகள் ஆகியவற்றை வைத்து மருத்துவர்கள் வைத்துவிட்டனர். இதனாலேயே வயிறு வீக்கம் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.

 இந்நிலையில் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement