தேர்வு கட்டணத்திற்கு கடும் சொற்களை வீசியெறிந்த கணவன்... மனமுடைந்த பெண் விபரீதம்.. உறவினர்கள் கண்ணீர் சோகம்.!
தேர்வு கட்டணத்திற்கு கடும் சொற்களை வீசியெறிந்த கணவன்... மனமுடைந்த பெண் விபரீதம்.. உறவினர்கள் கண்ணீர் சோகம்.!

திருமணமாகிய ஓராண்டுக்குள் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகாமையில் தானத்தாங்கி பகுதியில் வசித்து வந்தவர் காயத்ரி (வயது 20). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த நிலையில், வரம்பியம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற நபரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
தம்பதிகளுக்கு நான்குமாத பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், காயத்ரி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தேர்வு கட்டணம் செலுத்துவதற்காக தனது மாமனார், மாமியாரிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது தனது கணவர், மாமனார், மாமியார் ஆகிய அனைவரும் திட்டியதால் மன உளைச்சல் அடைந்துள்ளார்.
தொடர்ந்து தேர்வு கட்டணத்தை உனது தந்தையிடம் சென்று பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் கூறியுள்ளனர். இதனால் காயத்ரிக்கு 'தேர்வு கட்டணத்திற்கு கூட இப்படி ஒரு நிலை ஆயிற்றே என்ற எண்ணம் தோன்றிய நிலையில், மனவிரக்தியில் நாம் தற்கொலை செய்துகொண்டால் என்ன?' என்ற விபரீத எண்ணம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாத நிலையில், அவர்கள் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி திருவாரூர் சாலையில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பின் இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் மூலம் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும், பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்ததில், திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே சுமார் 2 மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.