குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்; காப்பாற்ற போன கணவருக்கும் பலத்த தீக்காயம்..!!
குடும்ப தகராறில் தீக்குளித்த பெண்; காப்பாற்ற போன கணவருக்கும் பலத்த தீக்காயம்..!!

அக்ஷயா என்ற பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை, கே.கே நகர், திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா இவர்களது மகள் அக்ஷயா.
அக்ஷயா இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். அக்ஷயாவின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அக்ஷயா தனது காதலனை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அக்ஷயா நேற்று மாலை தாய் மேனாகாவை பார்க்க கே.கே நகர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த கார்த்திகேயன் மேனகாவை கண்டித்துள்ளார். இதனால் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேனகா இதனால் மன வேதனை அடைந்தார். சமையலறைக்குள் சென்று மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். மேனகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கார்த்திகேயன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதனால் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இரண்டு பேரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கே.கே நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.