#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
ஓடும் இரயில் பலாத்கார முயற்சி.. உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண் நடுங்கவைக்கும் வாக்குமூலம்.!

அரைமணிநேர போராட்டத்திற்கு பின் கயவன் தன்னை இரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியதாக பெண்மணி பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண், சொந்த ஊர் செல்ல கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். இவர் வேலூர் மாவட்டத்தில் பயணித்தபோது, ஹேமராஜ் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடந்தது.
இதையும் படிங்க: குழந்தைக்கு சாகோஸ் வாங்கி கொடுக்குறீங்களா? உயிருடன் நெளிந்த புழு - வேலூரில் தாய்க்கு பேரதிர்ச்சி.!
கர்ப்பிணி என்று பெண் கூறியும் கொடூரன் கேட்காத நிலையில், அவனிடம் இருந்து பெண்மணி போராடியபோது, இரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார். இதனால் தலை, கை, கால் என உடலில் படுகாயம் அடைந்த பெண்மணி, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஹேமராஜ் என்ற நபரை கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
அவரிடம் நடந்த விசாரணையில் பெண்கள் விஷயத்தில் சைக்கோ கொடூரனான ஹேமராஜ், கடந்த 2022 மற்றும் 2024ம் ஆண்டுகளில் பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்து குண்டாசில் கைதான காமக்கொடூரன் என்பதும் அம்பலமானது. அவனை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்மணி அளித்த வாக்குமூலத்தில், "ஜோலார்பேட்டைக்கு வந்தபோது பெண்கள் இறங்கிவிட்டனர். அதில் அவர் ஏறினார். அரைமணிநேரம் கழித்து, எனது ஆடையை களைந்து பலாத்காரம் செய்ய முற்பட்டார். அப்போது இருவரும் சண்டையிட்டோம். எனது முடியை பிடித்து இழுத்து வந்து, வாசல் வழியே தள்ளிவிட்டார். பின் என்ன நடந்தது என தெரியவில்லை. அவசர ஊர்தி வந்தபோது தான் எதோ நிதானம் வந்தது" என கூறினார்.
இதையும் படிங்க: நவாஸ் கனி உருவ படத்திற்கு செருப்படி.. பாஜக வேலூர் இப்ராஹிம் கைது.. பரபரப்பில் மதுரை.!