நவாஸ் கனி உருவ படத்திற்கு செருப்படி.. பாஜக வேலூர் இப்ராஹிம் கைது.. பரபரப்பில் மதுரை.!



  BJP Vellore Ibrahim Arrested by Cops 

பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்தார். 

இதனிடையே, அங்குள்ள திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள், இப்ராஹிம் உட்பட பாஜகவினரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: #JustIN: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி; சூட்சமத்தை கூறிய நயினார் நாகேந்திரன்.!

வேலூர் இப்ராஹிம் கைது

ஜெயஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளனர். இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் உருவப்படத்தை, வேலூர் இப்ராஹிம் செருப்பால் அடித்தும் இருந்தார்.

முன்னதாக திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில், சிக்கந்தர் தர்காவுக்கு சென்ற இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிடுதலை தடுத்து அதிகாரிகள் நிறுத்தியதால் வாதம் உண்டாகியது. 

இதுதொடர்பாக இந்து - இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: #Breaking: முக ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றிக்கொடுத்த அண்ணாமலை? - பரபரப்பு பேட்டி.!