மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
#Breaking: முக ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றிக்கொடுத்த அண்ணாமலை? - பரபரப்பு பேட்டி.!
மதுரையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, "கூலித்தொழிலாளி மகன் பரீட்சசை எழுதி வரும் இருக்கையை, மாவட்ட ஆட்சியர் பதவியை, அதற்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை, இன்பநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது தவறானது. இருக்கையை விட்டுக்கொடுத்து தவறு. ஆட்சியரை ஓரமாக உட்கார வைத்துள்ளார்கள். ஒருகட்டத்தில் ஆட்சியர் எழுந்து சென்றது எப்படிப்பட்டது? பதவியை தக்கவைக்க இருக்கை தானம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவி தற்காலிகம் தான்
இருக்கைகையை கூட காப்பாற்றிக்கொள்ள முடியாத ஆட்சியர், எப்படி மக்களை காப்பாற்றுவார்? மூர்த்தி இப்போது பதவியில் இருப்பார் ஆடலாம், பதவி போனபின் அவர் சாதாரணமாக கோப்பில் உட்கார்ந்து விடுவார். ஆட்சியர் நடந்துகொண்ட விதம் நல்லதல்ல. மூர்த்தியிடம் உங்களின் இருக்கையை கொடுங்கள் என்றுதான் கூறி இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நடனமாடும் திமுக? - அண்ணாமலை அதிர்ச்சி தகவல்.!
பாஜக கட்சி திமுக முதல்வரின் பதவியை காப்பாற்றிக்கொடுத்துள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் முதல்வர் பதவி விலகுவேன் என அறிவித்தபின்னர், அதுதொடர்பான விஷயம் கைவிடப்படும் நிலைக்கு வந்ததாக முதல்வர் பேசியிருந்தால், அவரின் பதவியை நானே காப்பாற்றிக்கொடுத்திருக்கிறேன். இன்னும் ஒரு ஒன்றரை ஆண்டுகள் இருக்கட்டும் என வைத்துள்ளோம். தேயத்தொடங்கிய கட்சி, இருப்பில்லாத கட்சிகள் இன்று விஜயை அழைக்கிறார்கள். அதிமுக செல்லூர் ராஜு விஜயை கூட்டணிக்கு அழைத்திருந்தார்" என பேசினார்.
இதையும் படிங்க: திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு காட்டுவார்கள் - அண்ணாமலை ஆவேசம்.!