குழந்தைக்கு சாகோஸ் வாங்கி கொடுக்குறீங்களா? உயிருடன் நெளிந்த புழு - வேலூரில் தாய்க்கு பேரதிர்ச்சி.!



  in Vellore Chocos have a Worm 

ஆசையாக மகனுக்கு சாகோஸ் வாங்கி ஊட்டிவிட்ட தாய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பகுதியில் வசித்து வருபவர் சுபா. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவை சென்றிருந்த நிலையில், அங்கு டி-மார்ட்டில் குழந்தைக்கு கொடுக்க சகோஸ் வாங்கி இருக்கிறார். 

சில நாட்களுக்கு முன்பு வேலூர் திரும்பியவர், குழந்தைக்கு பாலில் சகோஸ் கலந்து கொடுத்துள்ளார். அப்போது, குழந்தை உணவை துப்பி இருக்கிறது. 

இதையும் படிங்க: நவாஸ் கனி உருவ படத்திற்கு செருப்படி.. பாஜக வேலூர் இப்ராஹிம் கைது.. பரபரப்பில் மதுரை.!

துப்பிய உணவை பார்த்தபோது, அதில் புழு ஒன்று உயிருடன் நெளிந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன சுபா, சாகோஸில் புழு இருந்ததாக உணவுப்பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.

Chocos

கவனமாக இருங்க - தாய் கோரிக்கை

இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு பெற்றோர் இனி சகோஸ் கொடுக்க வேண்டாம், கவனமாக செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

ஜூலை மாதம் வரை காலாவதி தேதி இருக்கும் சாகோஸில் புழு நெளிந்தது எப்படி? எனவும் கேள்வி எழுந்து, உணவின் மீதான தரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: 10 மணிநேர விசாரணை.. நாளை மீண்டும்? திமுக எம்.பி கதிர் ஆனந்த்..!