திருமணம் தாண்டிய உறவு... வீடியோவை காட்டி கல்லூரி மாணவர் படுகொலை... தாய் மகள் உட்பட மூவர் கைது.!

தென்காசி மாவட்டத்தில் திருமணம் தாண்டிய உறவின் காரணமாக கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 மாதங்கள் கழித்து துப்பு துலங்கி இருக்கிறது . இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் இளந்துறை சார்ந்த நாராயணனின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த போது அதிலிருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறை அந்த எலும்பு கூடிய எவ்வாறு செப்டிக் டேங்கிற்குள் புதைக்கப்பட்டது அதனை புதைத்தவர்கள் யார்? மற்றும் எலும்பு கூடாக இருக்கும் நபர் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்நிலையில் அந்தப் பகுதியில் நீண்ட நாட்கள் காணாமல் போனவர்களுடைய புகார்களை எடுத்து பார்த்தபோது மது என்ற மாடசாமி என்னும் கல்லூரி மாணவர் 7 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக புகார் பதியப்பட்டு இருந்தது. மேலும் அதே நேரத்தில் ஊரிலிருந்து யார் வெளியே சென்று இருக்கிறார்கள் என்று பார்த்தபோது இசக்கியம்மாள் பேச்சியம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டியன் என்ற மூன்று பேர் கோவைக்கு வேலைக்கு சென்று இருப்பது தெரிய வந்தது. மேலும் காணாமல் போன மது என்ற மாடசாமியின் குடும்பத்தினர் டிஎன்ஏ வும் எலும்புக்கூடு டிஎன்ஏவும் ஒத்துப்போனது.
இதனைத் தொடர்ந்து கோவை விரைந்த இலந்தூர் போலீசார் அங்கு தங்கி இருந்த பேச்சியம்மாள் இசக்கி அம்மாள் மற்றும் அவரது சகோதரர் தங்கபாண்டியன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தான் மாடசாமி கொன்று செப்டிக் டேங்கில் போட்டு மூடியதை ஒப்புக்கொண்டனர். மதுவிற்கும் பேச்சியம்மாள் இருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்திருக்கிறது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்து மாடசாமி பேச்சியம்மாளை தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார். இதனால் அவர் தனது தாயாருடன் சேர்ந்து திட்டம் தீட்டி மதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மதுவை தனியாக அழைத்து ஆபாச வீடியோ ஒன்றை காட்டி அதில் இருப்பது போல் நாம் செய்யலாம் என்று கூறிய அவரது கை கால்களை கட்டி தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தனது அண்ணன் மற்றும் தாயாரின் உதவியுடன் அவரது உடலை நாராயணன் வீட்டு செப்டிக் டேங்கில் போட்டு மூடி உள்ளனர். இந்த தகவல்களை அவர்கள் காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறை அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.