"ஆண் நண்பருடன் மது அருந்திய பெண் மர்ம மரணம்... " விசாரணை வட்டத்தில் உதவி இயக்குனர்.!!



woman-died-mysteriously-while-drinking-with-boy-friend

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பரின் வீட்டிற்கு சென்ற இளம் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண்ணின் நண்பரான கணேஷ் ராம் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீ லட்சுமி. 26 வயதான இவர் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சேலத்தைச் சேர்ந்த 26 வயத இளைஞரான கணேஷ் ராம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் புழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை மதுரவாயல் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வரும் கணேஷ் ராம் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

tamilnadu

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, கணேஷ் ராமை சந்திப்பதற்காக ஸ்ரீ லட்சுமி அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது இருவரும் சிக்கன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மது அருந்தியிருக்கின்றனர். இதன் பிறகு தனக்கு அசௌகரியமாக இருக்கிறது எனக் கூறிய ஸ்ரீ லட்சுமி, வாந்தி எடுப்பதற்காக கழிவறை நோக்கி செல்லும் வழியில் மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார் கணேஷ் ராம்.

இதையும் படிங்க: செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!

அங்கு ஸ்ரீ லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த ஸ்ரீ லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, அந்தப் பெண்ணின் நண்பரான கணேஷ் ராமிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!