விஜய் தளபதி ஜெயிப்பாரா? டெல்லியில் நடந்த சுவாரஷ்யம்.. ஸ்ரீதர் வேம்பு பகிர்ந்த முக்கிய தகவல்.!



Will Vijay Win Tamil Nadu Elections 2026? Sridhar Vembu Shares Interesting Delhi Incident

tஅரசியலில் விஜய் வெற்றி பெறுவாரா என டெல்லி விமான நிலையத்தில் பணியாற்றும் படைவீரர் எழுப்பிய கேள்வி கவனம் பெற்றுள்ளது.

நான்குமுனைப்போட்டி:

TVK Vijay Victory? தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி விறுவிறுப்புடன் ஒரே கட்டமாக நடைபெற்ற முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மே மாதம் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக, அதிகாரத்தை நோக்கி அதிமுக, நாம் தமிழர் மற்றும் விஜயின் தவெக என நான்கு கட்சிகள் பங்கேற்ற நான்குமுனைப்போட்டி நிலவியது. 

இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!

TVK Vijay

விஜயின் வருகை:

இந்த போட்டியில், விஜயின் அரசியல் வருகை காரணமாக திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் வாக்குகள் பிரிந்து விஜய்க்கு வாக்குகள் செலுத்தப்பட்டு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும், விஜய்யின் அரசியல் பயணத்துக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

TVK Vijay

முக்கிய மைல் கல்:

இந்நிலையில், வேலை நிமித்தமாக டெல்லிக்கு சென்ற ஜோகோ (Zoho) நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் உரிமையாளர் ஸ்ரீதர் வேம்புவிடம், மேற்குவங்கம் மாநிலத்தைச் சார்ந்த படை வீரர் ஒருவர் விஜய் ஜெயிப்பாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். இது தொடர்பான தகவலை ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, "ஜெயிக்கப்போவது யார் என்பது தெரியாது. என்றாலும், விஜயின் அரசியல் பயணத்தில் இந்த தேர்தல் மிக முக்கிய மைல் கல்லாக இருக்கும்" என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் மிகப் பெரிய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீதர் வேம்புவின் வலைப்பதிவு:

இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!