தீராத மோகம்! வெறிகொண்ட கள்ள காதல்! கணவனை கொலை செய்ய மனைவி போட்ட பலே திட்டம்!

கள்ள காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை மனைவி ஒட்டு ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன், இவரது மனைவி அஸ்வினி. இருவருக்கும் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அஸ்வினிக்கு பக்கத்துக்கு ஏரியாவை சேர்ந்த அனுராக் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது, இதனை அடுத்து மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் ராஜேந்திரனுக்கு தெரியவர, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். கணவன் கண்டித்தும் திருந்தாத அஸ்வினி கணவன் கண் முன்பே கள்ள காதலனுடன் தொலைபேசியில் கொஞ்சி கொஞ்சி பேசியுள்ளார்.
இந்நிலையில் தனது மனைவிக்கு நல்ல புத்தி குடு கடவுளே என மனைவியை அழைத்துக்கொண்டு ராஜேந்திரன் திருத்தணி கோவிலுக்கு ரயிலில் சென்றுள்ளார். தங்கள் ரயிலில் திருத்தணி செல்வதாகவும், ரயிலுக்கு வந்து எப்படியாவது தனது கணவரை தீர்த்துக்கட்டிடவிட்டு எனவும் அஸ்வினி அனுராக்கிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து கணவன் மனைவி செல்லும் அதே ரயில் பெட்டியில் தனது கூட்டாளிகள் இருவருடன் அனுராக் ஏறியுள்ளார். இதனை அடுத்து முகத்தில் முகமூடி அணிந்து அனுராக்கும், அவரது கூட்டாளிகளும் ராஜேந்திரனை ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனனர்.
ரயிலின் வேகம் குறைவாக இருந்ததால் ராஜேந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தண்டவாளம் அருகே காயங்களுடன் கிடந்த ராஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசாரிடம் பேசிய ராஜேந்திரன், தான் ரயிலில் இருந்து தவறி விழவில்லை என்றும், முகமூடி அணிந்த மூன்று பேர் தன்னை ரயிலில் இருந்து கீழே தள்ளியதாகவும் கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் கள்ள காதலனின் செயலாக இருக்கலாம் என ராஜேந்திரன் கூறியதை அடுத்து போலீசார் ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியை விசாரித்ததில் அவர் அணைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அஸ்வினி, அவரது கள்ள காதலன் அனுராக், அவரது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.