தமிழகம்

திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கட்டிய தாலியை கழட்டி மனைவி செய்த துரோகம்!.

Summary:

திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கட்டிய தாலியை கழட்டி மனைவி செய்த துரோகம்!.


சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் பக்கத்துக்கு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

மகளின் காதல் விஷயத்தை  அறிந்த ரம்யாவின் குடும்பத்தினர், அவசர அவசரமாக அவர்களின் உறவு முறையில் அருள்குமார் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான ஒரு மதத்திலே அருள்ராஜ் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு ரம்யா தலைமறைவாகியுள்ளார்.

ரம்யாவை  தீவிரமாக தேடிய குடும்பத்தார்கள், ரம்யா காதலன் சிவகுமார் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்துள்ளனர். மேலும் காதலனுடன் சேலம் காவல்நிலையத்திற்கு சென்ற ரம்யா, தனக்கு ‌கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து காவல்துறையினர் 3 குடும்பத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் ரம்யாவின்  விருப்பப்படி கா‌தலன் சிவகுமாருடன் சேர்த்துவைக்கப்பட்டார்.


Advertisement