வேறு பெண்களுடன் பேச்சு! செல்போனில் ஆபாச படங்கள்! கணவனின் லீலைகளால் காதல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!

வேறு பெண்களுடன் பேச்சு! செல்போனில் ஆபாச படங்கள்! கணவனின் லீலைகளால் காதல் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!


wife killed husband with father and brother

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடலோர கிராமத்தில் வசித்து வந்தவர் சோபாஸ். இவரது மகள் ஜாப்லின். இவர் சென்னையில் கல்லூரியில் படித்தபோது கார்க்கி என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு இருகுழந்தைகள் பிறந்த பின்பு சொந்த ஊருக்கே திரும்பி தனது தந்தை கட்டிக்கொடுத்த வீட்டில் கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் அப்பகுதியிலேயே ஜாக்லின் மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜாப்லின் வீட்டில் இருந்து கடுமையாக அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து பார்த்தபோது, கார்க்கி தூக்கிட்டு இறந்ததாக கூறி ஜாக்லின் கதறி துடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கார்க்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கார்கி தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை. மேலும் அவரது உடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டது போன்று காயங்கள் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

dead

அதனை தொடர்ந்து போலீசார் கார்க்கியின் மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அவர் தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், பெண்களுடன் பேசிக் கொண்டே ஆபாச படங்கள் பார்த்து வந்ததாகவும் கூறினார். இதனால் எனக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் என்னை அடித்துவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து எனது தந்தை மற்றும் அண்ணனுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு விரைந்த அவர்கள் கார்க்கியை கட்டிப்போட்டு கடுமையாகத் தாக்கினர்.

பின்னர் அங்கிருந்து எனது தந்தை மற்றும் சகோதரர் சென்றுவிட நான் வீட்டின் மற்றொரு அறையில் தூங்க சென்று விட்டேன். காலையில் சென்று பார்த்தபோது கார்க்கி உயிரிழந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து நாங்கள் மூவரும் திட்டம்தீட்டி கொலையை மறைக்க கார்க்கி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடினோம் என ஜாப்லின் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஜாப்லின் மற்றும் அவரது தந்தை, சகோதரர் மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.