தமிழகம்

இது எனக்கு பிறந்த குழந்தை இல்லை. கணவன் கூறிய ஒற்றை வார்த்தை! மனைவியின் கொடூர முடிவு.

Summary:

Wife killed husband in thiruvalur

திருவள்ளூர் மாவட்டம் படபிராம் என்னும் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான ராஜ். இவரது மனைவி கௌரி வயது 25 . இவர்களுக்கு ஒன்றை வயதில் ஆகாஷ் என்ற மகன் உள்ளார். ராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டைபோடுவந்துள்ளார்.

மேலும், தனது மனைவி மீது சந்தேகப்பட்ட ராஜ் உனது மகன் எனக்கு பிறக்கவில்லை என்றும் அதனால் அவனை கொலை செய்ய போகிறேன் எனவும் கௌரியை மிரட்டிவந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ராஜ் தனது மனைவி மற்றும் மகனை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி அருகில் இருந்த அம்மி கல்லை ராஜ் மண்டையில் போட்டு அவரை கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். பூட்டிய வீட்டில் இரண்டு நாட்களுக்கு பிறகு துர்நாற்றம் வந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பின்னர் தலைமறைவாக இருந்த கௌரியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வுக்கு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனது கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கௌரிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement