தமிழகம்

கள்ளக்காதலில் உச்சம்: கணவன் போக 2 கள்ளகாதலர்கள்..! கணவரை தீர்த்துக்கட்டி நாடகம் ஆடிய மனைவி.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

Wife killed husband for illegal relationship

கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து பின்னர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன்(39). இவரது மனைவி பவானி (31). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தரணிதரன் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.

கடன் தொல்லையால் கழுத்தை நெரித்து அவரே தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தரணிதரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் பவானியின் தொலைபேசியை சோதனை செய்தபோது அவர் மற்றொரு நபருடன் பலமுறை பேசிவந்ததும், தரணிதரன் உயிரிழந்தபோது அந்த வீட்டிற்கு வேறொரு நபர் வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தரணிதரன் மனைவி பவானியை விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. தரணிதரன் கார் ஓட்டுநராக பணிபுரிந்தபோது அவருடன் நண்பராக இருந்த தினேஷ்(31) என்பவர் அடிக்கடி தரணிதரன் வீட்டிற்கு வந்து சென்றபோது அவருக்கும் பவானிக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

தினேஷ் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கள் கள்ளக்காதலுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர்கள் அவரை கொலை செய்ய முடிவு செய்து சம்பவத்தன்று இரவு தரணிதரன் சாப்பிட சாப்பாட்டில் அவரது மனைவி பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார்.

ஆனால் பூச்சி மருந்தை சாப்பிடும் அவருக்கு எதுவும் ஆகாததால் உடனே தனது கள்ளக்காதலன் தினேஷுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். உடனே தரணிதரன் வீட்டுக்கு வந்த தினேஷ் பவானியின் துப்பட்டாவால் தரணிதரன் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அந்த துப்பட்டாவை அவரது கைகளில் சுற்றிவிட்டு, அவரே கழுத்தை நெருக்கி தற்கொலை செய்துகொண்டதுபோல் செட்டப் செய்துள்ளார்.

இவை அனைத்தும் தரணிதரன் மனைவி பவானியின் கண்முன்னே நடந்துள்ளது. தற்போது இருவரையும் கைது செய்துள்ள போலீசார் இவர்களிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். அதில், பவானிக்கு தினேஷ் அல்லாமல் மற்றொரு நபருடனும் கள்ள காதல் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement