தமிழகம் சமூகம் காதல் – உறவுகள் 18 Plus

கணவனை கொலைசெய்துவிட்டு மீன் வாங்க சென்ற மனைவி! வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Wife killed husband and went for fish purchasing in chennai

கணவனை கொலை செய்துவிட்டு மனைவி மீன் வாங்க சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை கோயம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (28). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று வீட்டில் வாய், காது, மூக்கில் இரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெறிக்கப்பட்டதை அடுத்து பிரேத பரிசோதனையில் நாகராஜ் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உறுதியானது. இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் நாகராஜின் மனைவி காயத்திரியிடம் தொடங்கியுள்ளனர்.

முதலில் தனது கணவன் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய காயத்ரி பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும், தனது கணவரின் நண்பர் மகேந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், இது தனது கணவனுக்கு தெரியவர அவர் மகேந்திரனை கொலை செய்யப்போவது கூறியதாகவும்

இதனால் தானும், மகேந்திரனின் மனைவியும் சேர்ந்து எனது கணவனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஏதும் தெரியாததுபோல் காட்டிக்கொள்ள மீன் வாங்க தான் மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டதாகவும் காயத்ரி கூறியுள்ளார். தனது கணவனின் கள்ளகாதலியின் கணவனை கொலை செய்ய மனைவியே துணை போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Advertisement