தமிழகம்

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு.! கணவன் தூங்கும் போது மனைவி செய்த காரியம்! துடிதுடித்து உயிரிழந்த கணவன்!

Summary:

wife killed his husband

திருமங்லம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜ் என்பவருக்கும், கேத்தீஸ்வரி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவராஜிற்கு சென்னையில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிவராஜிற்கு, சென்னையில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு  இருக்கும் தகவல் மனைவிக்கு தெரிந்துள்ளது. இதனால் சிவராஜிற்கும் அவரது மனைவி கேத்தீஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் சிவராஜின் மனைவி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிவராஜின் தலையில் கேத்தீஸ்வரி கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது தலையில் பலத்த காயமடைந்த சிவராஜ் வலி தாங்கமுடியாமல் அலறல் சத்தம் போட்டுள்ளார். சிவராஜின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கேத்தீஸ்வரியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 


Advertisement