தமிழகம்

கணவன் இருக்கும்பொழுதே வேறொருவருடன் உல்லாசம்.! கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து மனைவி செய்த கொடூர செயல்.!

Summary:

தேனி மாவட்டம் குள்ளகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கம்பத்தில் உள்ள தனியா

தேனி மாவட்டம் குள்ளகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் கம்பத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அல்லிநகரம் பகுதியை இருந்த வைஷ்ணவி என்ற பெண்ணிற்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகளும் இருந்துள்ளார்.

இந்நிலையில், அருண் குமார் கழுத்தில் காயத்துடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதுதொடர்பாக அருண்குமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அருண்குமாரின் மனைவி வைஷ்ணவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வைஷ்ணவிக்கும் - இதே ஊரை சார்ந்த ஜெயசந்திரன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விஷயம் அருண்குமாருக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்று கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வைஷ்ணவி ஜெயச்சந்திரனை அழைத்து வீட்டிற்கு வரவழைத்து அருண்குமாரை கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement