வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு.! அண்ணனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரச்செயல்.!



wife killed her husband

சென்னை மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் லாரிகளை வாடகை்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஸ்கரை குடும்பத்துடன் காணவில்லை என பாஸ்கரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஸ்கரின் மனைவி உஷா, மைத்துனர் பாக்யராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பாஸ்கரின் மனைவி உஷாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி சந்தேகப்பட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த உஷா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து உஷா தனது அண்ணன் பாக்கியராஜை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பாக்கியராஜ் தனது நண்பர்களுடன் வந்து பாஸ்கரை சரமாரியாக தாக்கி கொலை செய்து, பாஸ்கர் உடலை காரில் எடுத்து சென்று  கல்குவாரியில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து உஷா மற்றும் அவரது அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.