மனைவி வெளிநாட்டில்.., பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய சம்பவம்.. கடலூரில் திடுக்.!



Wife Exposes Husband’s Extramarital Affair Using Hidden CCTV Camera in Chennai

கணவருக்கே தெரியாமல் வீட்டில் சிசிடிவி கேமிரா வைத்து கண்காணித்த மனைவி, கணவரின் முறைதவறிய உறவை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

Dubai-Based Wife Catches Husband with Another Woman: கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண்மணி அபிநயா (வயது 29). இவர் துபாயில் செயல்படும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சென்னை மேற்கு மாம்பலம் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் அருள் பிரசாத் (வயது 34). இவர்கள் இருவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

தொடர்பு:

திருமணத்துக்குப்பின் வேலை காரணமாக அபிநயா துபாய் சென்று இருக்கிறார். இதனிடையே, அருள் பிரசாத்துக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துபாயில் இருந்து சில மாதங்கள் கழித்து சென்னை திரும்பிய அபிநயா, கணவரின் தொடர்பை அறிந்து கண்டித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

சென்னை வந்தார்:

பின்னர் கணவரின் செயல்பாடுகளை கண்காணிக்க, கணவருக்கே தெரியாமல் வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி இருக்கிறார். வீட்டில் இருந்தபடி கணவரின் செயல்பாடுகளை கவனித்து வந்த நிலையில், துபாய்க்கு மீண்டும் சென்ற அபிநயா, சில நாட்களுக்கு முன்பு திடீரென சென்னை வந்தார்.

illegal affair

பெண்ணுடன் உல்லாசம்:

பின் தனியார் விடுதியில் அறையெடுத்து தாங்கியவர், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கண்காணித்துள்ளார். அப்போது, கணவர் முன்தினம் இரவில் பெண் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

கையும் களவுமாக சிக்கினார்:

அந்த பெண் வீட்டிலேயே இருந்த நிலையில், வீட்டுக்கு நேரில் சென்ற அபிநயா பெண்ணை கையும் களவுமாக பிடித்துள்ளார். அருள் பிரசாத் நிலைமையை அறிந்து தப்பி ஓடி இருக்கிறார். அருள் அழைத்து வந்த பெண் அபிநயாவை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில், அபிநயாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அபிநயாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இதுகுறித்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அக்காவின் ஆசைக்கு தம்பி எதிர்ப்பு.. 7 வயது மகள் கண்முன் தாய்மாமன் நடத்திய பயங்கரம்.. நெல்லையில் கொடூரம்.. பகீர் பின்னணி.!