வேலை கொடுத்தவங்களுக்கே வேட்டு வச்ச கொடூரம்! குடும்பமாக சேர்ந்து செய்த குலை நடுங்க வைக்கும் சம்பவம்... சிக்கிய சிசிடிவி காட்சி!!!
அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ஓய்வுபெற்ற கேப்டனின் மனைவி அவரது வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 70 வயதான அந்த பெண்ணை, வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு உடலை மொட்டை மாடியில் மறைக்கவும் அவர்கள் முயன்றுள்ளனர்.
பணிப்பெண் குடும்பத்துடன் சேர்ந்து கொலை
பஞ்ச்குலாவில் உள்ள சொகுசு பங்களாவில் ஓய்வுபெற்ற கேப்டனும் அவரது மனைவியும் வசித்து வந்தனர். அங்கு பணியாற்றி வந்த பணிப்பெண், அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் பணியாற்றியவர் என்பதால் அவர்களிடம் குடும்பத்தினர் நம்பிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கொலை நடந்த பிறகு, தடயங்களை மறைக்கும் நோக்கில் மூவரும் பெண்ணின் உடலை வீட்டின் மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று மறைக்க முயன்றுள்ளனர். இதனால், போலீசாரின் விசாரணை உடனடியாக தீவிரப்படுத்தப்பட்டது.
சிசிடிவியில் சிக்கிய கொலைக்கான தடயம்
குற்றத்தை மறைக்க முயன்றாலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகள் முக்கிய ஆதாரமாக மாறின. மூன்று பேரின் நடவடிக்கைகளும் கேமராவில் பதிவாகியிருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அந்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில், பணிப்பெண், அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் பணியாற்றியவர்களையே நம்பியிருந்த நிலையில் நடந்த பஞ்ச்குலா கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
पंचकूला का विश्वासघात: जिसने खाना खिलाया, उसी ने जान ले ली😔
— Sachin Verma🐦 (@itSachinverma) August 9, 2026
ये घटना आपको सोचने पर मजबूर कर देगी।
हरियाणा के पंचकूला में एक आलीशान बंगले के अंदर रिश्तों का कत्ल हुआ। 70 साल की रिटायर्ड कैप्टन की पत्नी की घर में ही हत्या कर दी गई।
पुलिस जांच में खुलासा हुआ कि इस वारदात के पीछे… pic.twitter.com/4V4VtIthJQ
இதையும் படிங்க: குட்டி சிறுமி ஸ்கேட்டிங் ஓட்டும் போது நடந்த விபரீதம்! நொடிப்பொழுதில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம்... பகீர் காட்சி..!!!