விவசாயம் பார்த்த கணவனை வெளிநாட்டு வேலைக்கு போக சொன்ன மனைவி! பின்னர் நடந்த சோகம்.

விவசாயம் பார்த்த கணவனை வெளிநாட்டு வேலைக்கு போக சொன்ன மனைவி! பின்னர் நடந்த சோகம்.


Wife commit suicide for husband refused to go foreign job

விருதுநகர் மாவட்டம் சுந்தரராஜபுரம் என்னும் பகுதியை சேர்ந்தவர் பெரிய மாடசாமி. இவரது மனைவி ஸ்டெல்லா மேரி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டட பொறியாளருக்கு படித்துள்ள பெரிய மாடசாமி அதற்கான பணிக்கு செல்லாமல் சொந்த ஊரில் விவசாயம் பாத்து வந்துள்ளார்.

தனது கணவர் விவசாயம் பார்ப்பது அறவே பிடிக்காத அவரது மனைவி தனது கணவனை அரசாங்க வேலை அல்லது வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், தனது மனைவி கூறுவதை காதில் வாங்கிகொள்ளதா கணவன் தனக்கு பிடித்த விவசாய வேலையை செய்துவந்துள்ளார்.

Crime

இதனால் மனமுடைந்த ஸ்டெல்லா மேரி தனது கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்திவருகின்றனர்.