தமிழகம்

ரூ.3 கோடி காப்பீட்டுத் தொகைக்காக, கணவனை கருக்குள்ளே வைத்து எரித்த மனைவி.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

காப்பீட்டுத் தொகைக்காக, கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி மற்றும் உறவினரை போலீஸார்

காப்பீட்டுத் தொகைக்காக, கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி மற்றும் உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவருக்கு கடந்த மாதம் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து, அவரது மனைவி ஜோதிமணி மற்றும் அவரது உறவினரான ராஜா ஆகியோர் ரெங்கராஜை காரில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். 

அவர்கள் வரும் வழியில் காரை நிறுத்தி காருக்குள் இருந்த ரெங்கராஜ் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். இதனையடுத்து கார் தானாக பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதில்ரெங்கராஜன் மகனுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கணவர் ரெங்கராஜனுக்கு லட்சக் கணக்கில் கடன் இருப்பதாகவும், இவரைக் கொலை செய்து விட்டால், கணவரது காப்பீட்டுத் தொகை ரூ. 3 கோடி கிடைக்கும் என்பதற்காக ரெங்கராஜனை கருக்குள்ளே வைத்து பெட்டோரல் ஊற்றி எரித்ததும், இவற்றை மறைப்பதற்காக கார் தானாகவே தீப்பிடித்து எரிந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஜோதிமணி மற்றும் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.


Advertisement