அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இல்லாதது ஏன்.? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

அழைப்பிதழில் ஓபிஎஸ் பெயர் இல்லாதது ஏன்.? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!


why OPS name in invitation

திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறாதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே மறைமுக மோதல் போக்கு நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவிற்கான அழைப்பிதழில் துணை முதல்வர் ஓபிஎஸ் பெயர் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ops

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, துணை முதலமைச்சரின் பெயர் பிரதான நிகழ்ச்சிகளில் மட்டுமே இடம்பெறும் என்றும், திடக்கழிவு மேலாண்மை திட்ட நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லாததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.