இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் எப்போது திறக்கப்படுகிறது.?

இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் எப்போது திறக்கப்படுகிறது.?



whwn will open gyms in tamilnadu?

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா காரணமாக  தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. 

இதனையடுத்து பொதுமக்களின் நலனுக்காக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை பல கட்டங்களாக நீடித்து அரசு அறிவித்தது. அதன்படி, உடற்பயிற்சி கூடங்கள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்கள், கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் உடற்பயிற்சி கூடங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

gyms

தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை பரிசீலித்து, முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதில், மத்திய அரசு தனியார் உடற்பயிற்சி கூடங்களை திறக்க ஆகஸ்டு 5-ந் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்கள் 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயது உடைய வாடிக்கையாளர்களுடன் 10-ந் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.