மதம் பார்ப்பவர்களுக்கு சோறு இல்லை! கெத்து காட்டும் புதுக்கோட்டை மைந்தன்!

மதம் பார்ப்பவர்களுக்கு சோறு இல்லை! கெத்து காட்டும் புதுக்கோட்டை மைந்தன்!


who-seeks-religion-no-food


இந்து மதத்தை சாராதவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேசமயம் உணவிற்கு மதமில்லை என Zomato நிறுவனம் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என  பதாகை வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஓட்டல் மற்றும் காபி பார் நடத்தி வருபவர் அருண்மொழி. இவர் தனது உணவகங்களில் மதம் பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை என எழுதி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

Food

இது குறித்து அவர் கூறுகையில் "ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு. அதில் மதம் பார்ப்பது என்பது கண்டனத்திற்குறியது அதை கண்டிக்கும் வகையில் எனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளோம்" என கூறியுள்ளார். இதனையடுத்து அருண்மொழிக்கு பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.