
when athivaradhar reappears the ADMK remains in power
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும், அதிமுகதான் ஆட்சியில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொதுவிருந்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். கோவிலில் சமபந்தி விருந்தில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘ வேலூர் மாவட்டத்தை பிரித்தது போன்று, நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் மேலும் பல மாவட்டங்கள் உருவாக்கப்படும் என கூறினார்.
மேலும், நாகையிலிருந்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும், அதிமுகதான் ஆட்சியில் இருக்கும் என அமைச்சர ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு கனிமொழி வரவேற்றுள்ளது நல்ல விசயம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு பிரிவு நீக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நல்ல கருத்தைத் தான் கூறியுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Advertisement
Advertisement