"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. வெள்ளாற்றங்கரையில் வைத்து இளைஞர் செய்த பயங்கரம்..!
திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகே கார்மாங்குடி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீதர் விருப்பம் தெரிவித்தபோது, இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆவேசமடைந்த ஸ்ரீதர், பெண்ணை தனியாக பேச வேண்டும் எனக் கூறி வெள்ளாற்றங்கரைக்கு அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கியுள்ளார்.அப்போது விவசாயி ஒருவர் வருவதை கண்ட ஶ்ரீதர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இளம்பெண் அலறியதால் அவரை மீட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பின் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஸ்ரீதரை நெய்வேலியில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.