வரும் தேர்தலில் நமக்கு ஓட்டு இருக்கா, இல்லையா.? சந்தேகமே வேண்டாம் இதை மட்டும் செய்யுங்கள்.! மொத்த விவரமும் கிடைக்கும்.!

வரும் தேர்தலில் நமக்கு ஓட்டு இருக்கா, இல்லையா.? சந்தேகமே வேண்டாம் இதை மட்டும் செய்யுங்கள்.! மொத்த விவரமும் கிடைக்கும்.!



voter details

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. எனவே அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், தேர்தல் என்றாலே சிலருக்கு வரும் சந்தேகம் நமக்கு ஓட்டு இருக்கா, இல்லையா என்பது தான். அதிலும் வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் பணிபுரியும் நபர்களுக்கு தான் அதிகம் சந்தேகம் வரும். அதற்கு காரணம், பயணத்திற்கு செலவு செய்து சென்று நமக்கு ஓட்டு இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தான்.

Voter

இதற்கு கவலையே வேண்டாம். 1950 என்ற எண்ணிற்கு போன் செய்து, நீங்கள் எந்த சட்டமன்ற தொகுதி, உங்களது வாக்காளர் எண் அல்லது பெயர் மற்றும் முகவரி சொன்னாலே போதும். உங்களுக்கு எந்த வாக்கு சாவடி, உங்களது வரிசை எண் உள்ளிட்ட முழு விவரத்தையும் அளிப்பார்கள். முதலில் உங்களது STD Code -ஐ அழுத்திய பிறகு 1950 என்ற நம்பரை டயல் செய்யவும். அதாவது நீங்கள் சென்னை என்றால் 0441950 என டயல் செய்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.