காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

விருதுநகர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த அந்த பெண்ணின் குடும்பத்தார்கள் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ரத்த வங்கி பணியாளர்கள் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி.பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சுகப்பிரசவம் நடந்தாலும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்காது என சொல்லிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவர், ஒரு தவறும் செய்யாத எங்களது இந்த நிலைக்கு அரசே காரணம். எனது மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அரசுதான் முக்கிய பொறுப்பு. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெ.ஐ.வி விவகாரத்திலும் விருதுநகர் சுகாதார இணை இயக்குநர் மனோகரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மிரட்டுவதாக என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.