மனைவியை கொலை செய்து, தற்கொலை முயற்சி : பஸ்டாண்டில் நடந்த பகீர் சம்பவம்., மகன் கூறிய பரபரப்பு தகவல்..!

மனைவியை கொலை செய்து, தற்கொலை முயற்சி : பஸ்டாண்டில் நடந்த பகீர் சம்பவம்., மகன் கூறிய பரபரப்பு தகவல்..!


Viruthunagar Man Killed Wife and he Suicide Attempt

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, முத்துராமபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணி பிச்சை (வயது 65). இவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). தம்பதிகளுக்கு 2 மகள்கள், ஒரு மகள் இருக்கின்றனர். கணவன் - மனைவி இருவரும் சமீபத்தில் உவரி அந்தோனியார் ஆலயத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு பேருந்து நிறுத்தத்தில் இருவரும் அமர்ந்துகொண்டு இருந்த நிலையில், அந்தோணி திடீரென தனது மனைவி ஜெயலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ஜெயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிருக்கு போராடிய அந்தோணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தோணியின் மகன் விக்னேஷிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது அவர் கூறுகையில், "எனது பெற்றோருக்கும் - மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக எனது 2 சகோதரியை கயத்தாறு மற்றும் சிவகாசியில் திருமணம் செய்து கொடுத்தனர்.

இதனால் எங்களுக்கு கடன் தொல்லை ஏற்படவே, கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து சத்தமிட்டனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பெற்றோர் தற்கொலை செய்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தோணிக்கு சிகிச்சை தொடர்ந்து வருகிறது.