விருதுநகரில் 3 பேர் கும்பலால் நடத்தப்பட்ட பயங்கர கொலை; காவல்துறை விசாரணை.!Virudhunagar Sivakasi Man Killed by 3 Man Gang 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, மடத்துபட்டி பகுதியில் கொலை ஒன்று நடைபெற்றது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் அதிர்ச்சிதரும் தகவல் வெளியானது. அதாவது, வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள சத்திரப்பட்டி சக்தி மாரியம்மன் கோவிலை வேறொரு இடத்தில மாற்றம் செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இதுகுறித்து தவிட்டுராஜன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறார். இவ்வழக்கின் பேரில் விசாரணை நடத்திய நீதிமன்றம் கோவிலை வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்யவும் உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் தவிட்டுராஜனின் மீது, அதே ஊரில் வசித்து வரும் அரவிந்த் (25), பாண்டியராஜன் (24), பாண்டியன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் சந்தேகிகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.