இயற்கை உபாதையை கழிக்க சென்றபெண்ணுக்கு நடந்த சோகம்; பாம்பு தீண்டி பரிதாப மரணம்.! Virudhunagar Sathur Women Died Snake Bite 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், ஆர்.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். ஐயப்பனின் மனைவி அன்னலட்சுமி (வயது 44). தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க அன்னலட்சுமி, ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரை விஷம்பாம்பு தீண்டியுள்ளது. 

விருதுநகர்

இதனையடுத்து, அலறியபடி வீட்டிற்கு சென்று கணவரிடம் அன்னலட்சுமி நடந்ததை கூறியுள்ளார். விரைந்து அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு மனைவியை கொண்டு சேர்த்துள்ளார். 

அங்கு நள்ளிரவு நேரத்தில் தீவிர சிகிச்சை பெற்ற அன்னலட்சுமி, அதிகாலை நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வச்சகாரபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.