இந்தியா விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தின் மூலம் ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

Summary:

virat beat sachin and rickey ponding record

நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகள் உடனான நேற்றைய கடைசி ஒரு நாள் போட்டியில் தனது 43வது சதத்தை விளாசிய விராட் கோலி, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 99 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார் விராட் கோலி. இவர் கடந்த 10 ஆண்டுகளில் 20,018 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவரும், ஜம்பாவனுமான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இதுவரை ஜம்பவான் ரிக்கி பாண்டிங் 10 ஆண்டுகளில் 18,962 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை விராட் முறியடித்துள்ளார். இந்திய சார்பில் இதற்கு முன்பு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 10 ஆண்டுகளில் 15.962 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதனையும் விராட் தகர்த்துள்ளார்.


Advertisement