இந்த முடிவை மட்டும் எடுக்கவே எடுக்காதீங்க! வேலை கஷ்டமா இருக்கா? அதை விட கஷ்டம்... ஐடி ஊழியர்களுக்கு இளைஞர் சொன்ன ஷாக்கிங் அட்வைஸ்...!!!



viral-video-abhishek-job-resignation-advice

வேலையை ராஜினாமா செய்ய நினைப்பவர்கள் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என அறிவுரை கூறி அபிஷேக் என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கடந்த 8 மாதங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அனுபவம் தனது பார்வையை மாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். வேலை இருப்பதன் முக்கியத்துவத்தை அந்த காலகட்டத்தில்தான் உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

8 மாத ஓய்வு மாற்றிய பார்வை

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் அபிஷேக், கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தையை பெத்தெடுத்த மகள் பிரசவ வார்டில் சொன்ன அந்த ஒரு வார்த்தை! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்... நெகிழ்ச்சி வீடியோ!!!

நீண்ட நாட்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தது, வேலை குறித்த தனது எண்ணத்தையே மாற்றிவிட்டதாக அவர் கூறுகிறார். பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் ஒரு பக்கம் என்றால், எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருப்பது அதைவிட அதிகமான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

வேலையை விட்டுவிடும் முன் யோசிக்க வேண்டும்

தற்போதைய வேலையில் விருப்பம் இல்லாமல் அதை விட்டுவிட நினைப்பவர்கள் தனது கருத்தை கவனமாக கேட்க வேண்டும் என அபிஷேக் வலியுறுத்துகிறார். வெறுமனே வேலைப் பளுவில் இருந்து தப்பிப்பதற்காக ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும், முடிந்தவரை வேலையைத் தொடர்ந்து செய்யுமாறும் அறிவுறுத்துகிறார்.

வேலையை மாற்றலாம்; ஆனால் வேலையில்லாமல் இருக்க வேண்டாம்

வேலையை விட்டுவிட்டால் உடனே வாழ்க்கையில் நிம்மதி கிடைத்துவிடும் என்று நினைப்பது சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வேலையிலிருந்து வெளியேறுவதைவிட, வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய வேறு வேலை அல்லது வாய்ப்பைத் தேடுவது சிறந்த முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அபிஷேக்கின் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வேலை இல்லாமல் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தம், வேலை என்பது சம்பளத்துக்கு அப்பாற்பட்டு தரும் ஒழுங்கு, சமூக தொடர்பு மற்றும் தினசரி செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நெட்டிசன்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஏதோ அதிஷ்டம் இருந்துருக்கு! நல்ல வேலை... சாலையை கடந்த குழந்தைகள்! அடுத்த நொடி மின்னல் வேகத்தில் வந்து கடைக்குள் புகுந்த கார்... திக் திக் காட்சி...!!!