தமிழகம்

திருமணத்திற்கு முன்பே காதலனுடன் நெருக்கம்! குழந்தை பெற்ற அன்று மாலையே திருமணம் செய்த காதல் ஜோடிகள்!

Summary:

Vilupuram kokila paramasivan

விழுப்புரம் மாவட்டம் கடவம்பாக்கத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அதே பகுதியை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு காதல் ஜோடிகளும் திருமணத்திற்கு முன்பே நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதனால் கோகிலா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார். இவர்களின் காதல் லீலைகள் இருவீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. முதலில் ஒப்புக்கொள்ளாமல் இருந்த கோகிலாவின் வீட்டில் அதன்பிறகு அவர்களது காதலை ஏற்று கொண்டுள்ளனர்.

ஆனால் பரமசிவன் வீட்டில் இருவரின் காதலையும் ஏற்று கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கோகிலாவுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை அடுத்து அன்றைய தினமே இருவீட்டார் சம்மதத்துடன் திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். 


Advertisement