குல்பி சாப்பிட்ட 85 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி; விற்பனையாளர் அதிரடி கைது.. விழுப்புரத்தில் நடந்த பகீர் சம்பவம்.!

குல்பி சாப்பிட்ட 85 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி; விற்பனையாளர் அதிரடி கைது.. விழுப்புரத்தில் நடந்த பகீர் சம்பவம்.!



Viluppuram Vikravandi 35 Children Admit Hospital to Treatment after Eat Gulfi 

 

ஆசையாக குழந்தைகள் கேட்கிறதே என குல்பி வாங்கிக்கொடுத்த பெற்றோருக்கு, சிலமணிநேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, முட்டத்தூர் கிராமத்தில், நேற்று மாலை நேரத்தில் குல்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமியர்கள் என பலரும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், இரவு 10 மணியளவில் குல்பி சாப்பிட்ட சிறுவர்-சிறுமியர்கள் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். 

இதனால் பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள் குல்பி சாப்பிட்ட அனைவரையும் அழைத்துக்கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையளிக்க கூறியுள்ளனர். 

Viluppuramமாதிரி படம்: மருத்துவமனை

3 வயதுடைய குழந்தைகள் முதல் 15 வயதுடைய நபர்கள் என மொத்தமாக 85 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் குல்பியில் மயக்க மருந்து கலக்கப்பட்டதா? கெட்டுப்போன குல்பி வழங்கப்பட்டதா? என சோதனை நடக்கிறது. 

நேற்று இரவில் 40 குழந்தைகள் அடுத்தடுத்து சிகிச்சை பெற அனுமதியான நிலையில், தற்போது வரை ஒருவர்பின் ஒருவராக என 85 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட கிராமத்தில் குல்பி விற்பனை செய்த மர்ம நபருக்கும் அதிகாரிகள் வலைவீசியிருந்த நிலையில், குல்பி விற்பனை செய்த கண்ணன்  கைது செய்யப்பட்டுள்ளார்.