#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்.. போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!
பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர்.. போக்ஸோவில் தூக்கிய அதிகாரிகள்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், திருவக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 26). இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில், 8 ஆம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சிறுமி பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்தபோது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.
மகள் கூறிய தகவலை கேட்டு பதறிப்போன தாய், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.