பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி கல்குவாரியில் தற்கொலை.. பதறவைக்கும் துயரம்.!

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி கல்குவாரியில் தற்கொலை.. பதறவைக்கும் துயரம்.!


Viluppuram Vanur 8 th Class 13 Aged Minor Girl Suicide at Quarry due to Sexual Harassment

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், திருவக்கரை பகுதியில் வசித்து வருபவன் பாண்டியன் (வயது 26). இவன் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். இதே பகுதியில் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமி சம்பவத்தன்று பள்ளிக்கு செல்லும் போது, கயவன் பாண்டியன் சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். 

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டிற்கு அழுதபடி சென்று, தாயிடம் நடத்தை கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை கேட்டு அதிர்ந்துபோன தாய், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாண்டியனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Viluppuram

பாலியல் தொல்லை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி மன உளைச்சலில் தவித்து வந்த நிலையில், பெற்றோர்கள் ஆறுதல் கூறியும் மனம்தளர்ந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்துள்ளார். 

இந்த தகவலை அறிந்த வானூர் காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.