தமிழகம் இந்தியா

ஓசி குடிக்கு ஆசைப்பட்டு போன ரௌடியை, தென்னந்தோப்பில் அடக்கம் செய்த கும்பல்.. பரபரப்பு சம்பவம்.!

Summary:

ஓசி குடிக்கு ஆசைப்பட்டு போன ரௌடியை, தென்னந்தோப்பில் அடக்கம் செய்த கும்பல்.. பரபரப்பு சம்பவம்.!

இருவேறு பகுதி ரௌடிகளுக்கு இடையே நடந்த பிரச்சனையில், ஒருவருக்கு மதுவை ஊற்றிவிட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர், கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கலைமணி. இவரின் மகன் அபிஷேக் (வயது 23). அபிஷேக்கின் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. இவர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் இரத்த காயத்துடன் அபிஷேக் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அபிஷேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அபிஷேக் மாலையில் வீட்டில் இருந்தபோது, 4 பேர் கும்பல் அவரை மதுபானம் அருந்த அழைத்துள்ளது. அபிஷேக்கும் ஓசி குடிக்கு ஆசைப்பட்டு சென்ற நிலையில், தென்னந்தோப்பில் வைத்து அனைவரும் மதுபானம் அருந்திய நிலையில், அபிஷேக்குக்கு போதையை ஏற்றிவைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. 

அபிஷேக் உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த காரணத்தால், அவனுக்கும் - நொச்சிகுப்பதை சேர்ந்த மற்றொரு ரௌடிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் அபிஷேக் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடக்கிறது. மேலும், கொலையாளிகளை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement